செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டாவும் ரணிலும் எதேச்சதிகாரமாக முன்னெடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து | சஜித்

கோட்டாவும் ரணிலும் எதேச்சதிகாரமாக முன்னெடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து | சஜித்

3 minutes read

அரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள்மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரு வகையான எதேச்சதிகாரமான ஆட்சியின் ஊடாக இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீரழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த நாட்டுக்குள் சர்வாதிகாரப் போக்கை உருவாக்கி இனவாதத்தையும் இன பேதத்தையும் மதவாதத்தையும் மதபேதத்தையும் அரச நிகழ்ச்சி நிரலில் உயர் மட்டத்துக்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்ற, அதிகாரம், நிறைவேற்ற அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளோடு, அதிகாரங்களுக்கிடையேயான பகிர்வை முழுமையாக மீறி, நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாக பயன்படுத்துகின்ற செயற்பாட்டுக்கு சென்றதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று சனிக்கிழமை (07) கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ‘முறைமை மாற்றத்திற்கான சட்ட சீர்திருத்தங்கள்’ எனும் தொனிப்பொருளில் மாநாடொன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த மோசமான ஆட்சியை ஜனநாயகப் போராட்டம் ஒன்றின் மூலமாக வெளியேற்றினார்கள். ஆரம்ப காலப்பிரிவில் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தி எதேச்சதிகார செயற்பாட்டின் மூலமாக இந்த நாட்டின் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டது.

அதன் பிற்பாடு தற்போதைய புதிய பதில் ஜனாதிபதியினாலும் எதோச்சதிகாரத்தை மோலோங்கச் செய்து, நிறைவேற்று அதிகாரத்தை மையப்படுத்திக்கொண்டு, தன்னிச்சையாக அரசியல் அமைப்பின் சட்ட விதிமுறைகளை வெளிப்படையாக மீறி, அவர்களுக்கு விருப்பமான பொலிஸ்மா அதிபரை நியமித்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இப்பொழுது உயர் நீதிமன்றத்தினால் அதனை இரத்து செய்துள்ளது.

பதில் ஜனாதிபதி இந்த நாட்டு மக்களின் மக்கள் ஆணையையும், வாக்குரிமையையும் மீறி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்காமையானது அடிப்படை உரிமையை மீறியதாக சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் ஏகமானதாக தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

நாட்டின் அரசியலமைப்பு ஒரு தனி நபரை மையப்படுத்தியதாக இல்லாமல், ஜனநாயகம், சுதந்திரத்திற்கான மக்கள் உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பலப்படுத்தப்படுதல் போன்ற விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாத செய்கின்ற, அரசியலமைப்பிற்கு தலைமைத்துவத்தை வழங்கும்.

நடைமுறையில் மாற்றங்களை இலக்காகக் கொண்டு சட்ட மறுசீரமைப்பு தமது நோக்கமும் வேலை திட்டமும் ஆகும். அடிப்படை உரிமைகள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்பனவற்றோடு மாத்திரம் உரிமையின் பகுதிகள் மட்டுப்படுத்தப்படாமல் பொருளாதார, சமூக, கலாச்சார, மதம் உள்ளிட்ட ஏனைய உரிமைகள் வரையும் கொண்டு செல்லப்பட வேண்டும். அத்தோடு ஊழல் எதிர்ப்பு வேலை திட்டங்களும் பலப்படுத்தப்பட வேண்டும்.

அரசியல் டீல்களுக்கு இடமில்லை  

நாட்டை வங்கரோத்தடையச் செய்தவர்களையும், VFS கொடுக்கல் வாங்கல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியே வெளிப்படுத்தியது. எனவே மோசமான அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்கும் டீல்களுக்கும் இடமளிப்பதில்லை. கடந்த ஐந்து வருட காலத்திற்குள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

ஆனாலும் நாம் கொள்கை ரீதியாக ஒரே நிலையிலே இருந்தோம். பணத்துக்காக உறுப்பினர்களை கொள்வனவு செய்யவில்லை. அதே கொள்கையை எதிர்காலத்திலும் பின்பற்றுவோம். இந்த மோசமான கலாச்சாரத்தை நிறுத்தி, முற்றுப்புள்ளி வைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமக்குத் திருடர்களுடன் டீல் இல்லை  

எமக்குத் திருடர்களுடன் டீல் இல்லை என்பதால் அன்று நாம் திருடர்களுடன் சேர்ந்து பதவிகளை பொறுப்பேற்கவில்லை. தனக்கு இலஞ்ச கலாச்சாரத்துக்குள் இருக்க முடியாது. அவற்றை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே அந்த விடயங்களை நாம் செய்யவில்லை.

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் கொள்கையை காட்டிக் கொடுக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதியை போல திருடர்களுடன் சேர்ந்து வாழவில்லை. நாட்டைச் சூறையாடிய திருடர்களுடன் ஒன்றாக திருமண விருந்து உண்பதற்கு வெட்கமாக இருக்கின்றது.

நான் தனி போக்கில் செயல்படுவதில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பல துறைகளுக்கு நியமனங்களை வழங்க முடியும். அதற்கான அதிகாரம் கிடைக்கின்றது. ஆனாலும் அந்த விடயத்தையும் நான் தனிப்போக்கில் செய்ய தயார் இல்லை. அது தொடர்பில் எமது தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிப்படையான கருத்துக்களை பெற்று சரியான தீர்மானத்தோடு செயற்படுவேன்.

இந்த நாட்டின் நிர்வாகம் என்பது எமக்கு உரிமம் எழுதித் தரப்படுகின்ற ஒன்று அல்ல. அது தற்காலிக பொறுப்பு. அதனை நல்லுள்ளதோடு பொறுப்பேற்று, இந்த நாட்டிற்காக செய்கின்ற அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் சரியாக சிந்தித்து செயல்படுவேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More