7
இலங்கையில் சிவில்சமூகம் கண்காணிக்கப்படுகின்றது துன்புறுத்தப்படுகின்றது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.
சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதற்கு தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.