அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை (04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெங்ஷங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஆறாவது சரத்தில் உள்ள பாரம்பரிய மீன்பிடி கடலில் உள்ள மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள 125க்கு மேற்பட்ட இந்திய மீனவர்களையும், 190க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு தமிழக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் மீன்பிடி படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 10க்கு மேற்ப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற 4 கோரிக்கைகள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.