செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்டுநாயக்கவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

1 minutes read

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதுடன்,  அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது நேற்று சனிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

அவரிடமிருந்து 05 கிலோ 26 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து, மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய சந்தேக நபரை அழைத்துச் செல்ல காத்திருந்த கார் சாரதி மற்றும் காரில் சென்ற மற்றுமொரு பெண் ஆகிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வேபோட மற்றும் வாதுவ பிரதேசங்களை சேர்ந்த 36, 33 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.