
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை நடப்பு ஆண்டில் கூடுதலாக இருந்து வந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து உள்ளது என்றாலும் , கடுமையான குளிர் நிலவி வருகிறது.
மேகமூட்டத்துடன் கூடிய நடுங்க வைக்கும் இந்த பனி குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது.
இந்த நிலையில், குளிர், மேகத்தை அனுபவிக்க வெளி மாவட்டம், வெளி மாநிலம் பகுதியில் இருந்து சுற்றுலா பிரியர்கள் திடீரென வர ஆரம்பித்துள்ளனர்.
வெறிச்சோடி இருந்த ஊட்டி , குன்னூர் பூங்காக்கள், கோடநாடு காட்சி முனை உள்பட காட்சி முனைகளிலும் கூட்டம் வர தொடங்கி உள்ளன.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.