செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு முனையம்: சர்வதேச வாக்குறுதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும்!

கிழக்கு முனையம்: சர்வதேச வாக்குறுதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும்!

0 minutes read

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இலங்கை, தனது சர்வதேச வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமென இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சின்பேச்சாளர் அனுரக் ஸ்ரீவத்சவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்து இயக்குவதற்காக கடந்த 2019 மே மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டமை அனைவரும் தெரிந்த விடயமாகும்.

மேலும், துறைமுகம் எரிசக்தி போன்றவற்றில் இலங்கையின் உட்கட்டமைப்புகளை இந்தியா சீனாவின் முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்வது, பரஸ்பர நன்மையளிக்க கூடிய விடயமாக காணப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றியமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.