செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் 3கைது!

யாழில்.நாட்டு துப்பாக்கி உட்பட வெடிமருந்துகளுடன் 3கைது!

0 minutes read

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கியும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் காட்டுப் பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் அவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.