செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே

1 minutes read

சமுத்திரக்கனி, ரித்விகா, அருந்ததிநாயர், யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே திரைப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. சமுத்திரக்கனியில் அதிரும் குரலில் படத்தின் போஸ்டர் வீடியோ வடிவிலும் வடிவமைத்து படக்குழுவினர் வெளியிடப்பட்டுள்ளனர். 

என்.ஏ. இராசேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தில் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் முக்கிய பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். படத்தில் மேலும் ஆதிரை, பொன் முத்துவேல் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

பார்டர், பாரிஸ் ஜெயராஜ், வால்டர் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் பிரபுதிலக் மற்றும் சி. ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வெகு விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. 

Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture  Galleries | Celebrity photos .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More