பான் இந்திய அளவில் புகழ்பெற்ற தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான தனுஷ் – மம்முட்டி இணைந்து மிரட்டும் ‘ஓம் ‘திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஃபா ஃபா ஃபா…’எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, ஸ்ரீ லீலா, சாய் பல்லவி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வுண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் – அஜ்மத் ஜக்மக்- ஷ்ரத்தா அகர்வால் – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஐக்கிய அரபு அமீரகம் தங்களை வரவேற்கிறது..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் தமிழ் ஆதவன் எழுத , பின்னணி பாடகர் சாய் அபயங்கர் மற்றும் தமிழ் ஆதவன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இந்தப் பாடல் துள்ளலிசை பாடலுடனும், அரபிய மொழி வார்த்தைகளுடனும் இணைந்திருப்பதால்… இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.