செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 2022 ஐ.பி.எல்; மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

2022 ஐ.பி.எல்; மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்

1 minutes read

இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. 

அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

இந் நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேப்பிடல்ஸ் (DC), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mi) ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR), ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) 2 பேரையும் தக்கவைத்துள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்:

  • ரவீந்திர ஜடேஜா – ₹16 கோடி
  • எம்.எஸ். தோனி – ₹12 கோடி
  • மொயீன் அலி – ₹8 கோடி
  • ருதுராஜ் கெய்க்வாட் – ₹6 கோடி

மும்பை இந்தியன்ஸ்:

  • ரோஹித் சர்மா – ₹16 கோடி
  • ஜாஸ்பிரீத் பும்ரா –  ₹12 கோடி
  • சூர்யகுமார் யாதவ் – ₹8 கோடி
  • கைரன் பொலார்ட் – ₹6 கோடி

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

  • விராட் கோலி – ₹15 கோடி
  • கிளென் மேக்ஸ்வெல் – ₹11 கோடி
  • மொஹமட் சிராஜ் – ₹7 கோடி

டெல்லி கேபிடல்ஸ்:

  • ரிஷப் பந்த் – ₹16 கோடி
  • அக்சர் படேல் – ₹9 கோடி
  • பிரித்வி ஷா – ₹7.50 கோடி
  • அன்ரிச் நோர்க்கியா – ₹6.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  • ஆண்ட்ரே ரஸல் – ₹12 கோடி
  • வருண் சக்ரவர்த்தி – ₹8 கோடி
  • வெங்கடேஷ் ஐயர் – ₹8 கோடி
  • சுனில் நரைன் – ₹ 6 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

  • மயங்க் அகர்வால் – ₹12 கோடி
  • அர்ஷ்தீப் சிங் – ₹ 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

  • கேன் வில்லியம்சன் – ₹14 கோடி
  • அப்துல் சமத் – ₹4 கோடி
  • உம்ரான் மாலிக் – ₹ 4 கோடி

ராஜஸ்தான் ரோயல்ஸ்:

  • சஞ்சு சாம்சன் – ₹14 கோடி
  • ஜாஸ் பட்லர் – ₹10 கோடி
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ₹4 கோடி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.