செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாடசாலை கூரை இடிந்து வீழ்ந்ததில் ஆசிரியை உட்பட 35 பேர் உயிரிழப்பு: 50க்கும் மேற்பட்டோர் காயம்

பாடசாலை கூரை இடிந்து வீழ்ந்ததில் ஆசிரியை உட்பட 35 பேர் உயிரிழப்பு: 50க்கும் மேற்பட்டோர் காயம்

1 minutes read

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவர் உட்பட 34 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகளும் வைத்தியசாலை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான கட்டட அனர்த்தங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அல்-கைர் பாடசாலையிலேயே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வகுப்பறைகளின் கூரைகளே இவ்வாறு திடீரென இடிந்து வீழ்ந்துள்ளன.

விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் 6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் மூத்த மாணவர் 14 வயதுடையவர் என்றும் லேடி ரீடிங் வைத்தியசாலையின் பேச்சாளர் மொஹமட் ஆசிம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

அனர்த்தம் நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டிகளும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். சுமார் 100 மீட்புப் பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகளை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டுப் பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் பேச்சாளர் பிலால் பைஸி குறிப்பிட்டுள்ளார்.

மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் 40க்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும், மேலும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பவம் இடம்பெற்றதும் அப்பகுதி வாழ் பொதுமக்களும் பெற்றோரும் உடனடியாக மீட்புப் பணிகளில் கைகோர்த்துள்ளனர். இடிபாடுகளிலிருந்து மூன்று சிறுமிகளைத் தாம் மீட்டதாகவும், தமது மகன் தண்ணீர் குடிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்ற காரணத்தினால் உயிர் தப்பியதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கூரை சரிந்து விழுந்த வேளையில் வானமே தலையில் விழுந்தது போன்ற பேரதிர்ச்சி ஏற்பட்டதாக சம்பவத்தில் தப்பிய ஆசிரியை ஒருவர் விவரித்துள்ளார்.

பாகிஸ்தானில் கட்டட நிர்மாணத் தராதரங்கள் உரிய முறையில் பின்பற்றப்படாமையும், தரம் குறைந்த மூலப்பொருட்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதுமே இவ்வாறான தொடர்ச்சியான விபத்துகளுக்கு பிரதான காரணமாக அமைகின்றன.

இக்கோர விபத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலை வளாகத்திலும் பாடசாலை சூழலிலும் கூடியிருந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிலையை அறிய முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியிருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.