செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இரண்டாவது பருவத்திலும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடன் மோதும் ஜப்னா கிங்ஸ்!

இரண்டாவது பருவத்திலும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடன் மோதும் ஜப்னா கிங்ஸ்!

0 minutes read

இரண்டாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்னா கிங்ஸ் அணி மோதவுள்ளது.

முதலாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதிய நிலையில், ஜப்னா அணி சம்பியனானது.

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், 23 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.