செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு நபர்களில் திமுத்தும்

ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு நபர்களில் திமுத்தும்

0 minutes read

2021 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்னவும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இவ்வாண்டு மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 69.38 சராசரியில் 902 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் நான்கு சதங்களும் அடங்கும்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு அற்புதமான சதம், பல்லேகலவில் நடந்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு இரட்டை சதம் உட்பட இரண்டு சதங்கள் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக காலியில் ஒரு அற்புதமான சதம் கருணாரத்னவின் இந்த ஆண்டின் சிறப்பம்சங்களாகவுள்ளன.

திமுத் கருணாரத்ன தவிர இந்த விருக்கான பரிந்துரையில் இங்கிலாந்தின் ஜோ ரூட், இந்தியாவின் ரவீச்சந்திரன் அஷ்வின் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.