செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து அணி தடுமாற்றம்!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து அணி தடுமாற்றம்!

1 minutes read

நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இன்றைய நான்காம் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ரோஸ் டெய்லர் 37 ஓட்டங்களுடனும் ரச்சின் ரவிந்திரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 17 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

நியூஸிலாந்தின் பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 122 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 75 ஓட்டங்களையும் வில் யங் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொமினுல் ஹக் 2 விக்கெட்டுகளையும் எபொட் ஹொசைன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 458 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொமினுல் ஹக் 88 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 86 ஓட்டங்களையும் ஹசன் ரோய் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் நெய்ல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 130 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இறுதிநாள் ஆட்டத்தை நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி நாளை தொடரவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.