செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்!

இலங்கையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும்!

0 minutes read

பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அஷோக பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “பால்மா ஏற்றிய கப்பல்கள் இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா வர இருக்கின்றது.

மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்தனர்.

அந்தவகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயிலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 1,345 ரூபாயிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.