கார்த்திகை மாதத்து
பூக்கள் பூத்திட
இன்னும் சில நாட்கள்
கடந்திட வேண்டும்.
மனதினுள் மீளும்
பழைய நினைவுகள்
கனவுதேசத்து நினைவு
கானலான சோகங்கள்.
தூரோகத்தின் சூழ்ச்சி
நம்மோடு இருந்ததால்,
நமக்கது பலவீனமானதால்
பெற்ற தோல்விகள்.
துடிதுடித்துச் செத்த
எங்கள் சொந்தங்களின்
துயரங்கள் எல்லாம்
நினைவில் மீண்டிடும்.
தன்னுயிர் ஈர்ந்தொரு
வீரன் மண்ணில் சாய்ந்திட
மண்ணுக்காக மரணித்த
தியாகத்தின் சிகரமவன்.
இருட்டில் தனியாக
போகப் பயந்தவள்
காட்டின் காவலரனில்
காத்திருந்த நேரங்கள்.
பகைவீட்டின் குகையில்
நுழைந்தொரு வேவு
தெளிந்தொரு வரைபடம்
தந்தவளும் வீழ்ந்தாள்.
கார்த்திகை மாதமது
தேசத்தின் நினைவுகளை
மீட்டுத் தந்து போகும்.
மனமிங்கே இரண்டுபடும்.
நதுநசி