செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை!

0 minutes read

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் சில நாட்களுக்கு குறைந்த வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் காணப்படுவதால், கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறையின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.