செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட்: 126 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

நியூஸிலாந்து அணிக்கெதிரான 2வது டெஸ்ட்: 126 ஓட்டங்களுக்கு சுருண்டது பங்களாதேஷ்!

1 minutes read

இதன் படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷ் அணி 395 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 521 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 252 ஓட்டங்களையும் டெவோன் கோன்வே 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் மற்றும் எபொட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொமினுல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யாசிர் அலி 55 ஓட்டங்களையும் நுருல் ஹசன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தற்போது போட்டியின் மூன்றாவது நாளான நாளை, நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுமா அல்லது பங்களாதேஷ் அணியை போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.