செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த வெப்ப நிலை!

டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த வெப்ப நிலை!

0 minutes read

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்துள்ளதால், கடும் குளிரில் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கடுமையான பனிமூட்டமும் காணப்பட்டதால், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

டெல்லியின் அண்டை மாநில நகரங்களிலும் இதே போன்ற கடும் குளிர் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பனிமூட்டம் காரணமாக பல்வேறு தடங்களில் முக்கிய ரயில்கள் தாமதமாகியுள்ளன.

டெல்லிக்கு வரும் ரயில்களும் பனிமூட்டம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ரயில்களில் வருவோரை வரவேற்க வந்தவர்களும் ரயிலில் செல்லும் பயணிகளும் ரயில் நிலையங்களில் நடுங்கும் குளிரில் மணிக்கணக்கில் காத்திருந்தனர் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.