செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பனிச்சறுக்கில் அசத்தும் நடிகை…!

பனிச்சறுக்கில் அசத்தும் நடிகை…!

0 minutes read

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிச்சறுக்கு செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.