செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு வருடாந்தம் மூன்று இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி!

இலங்கைக்கு வருடாந்தம் மூன்று இலட்சம் தொன் பிளாஸ்டிக் இறக்குமதி!

1 minutes read

வருடாந்தம் மூன்று இலட்சம் தொன் பிளாஸ்டிக் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவற்றில் 92.9 வீதமானவை சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில் எறியப்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு பிளாஸ்டிக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஆம் ஆண்டு மட்டும் 12,200 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் தரவுத் தொகுதி மூலம் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெ ளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளில் 7.1 வீதம் மாத்திரமே மீள் சுழற்சி செய்யப்படுவதாகவும் ஏனையவை சுற்றாடலில் எறியப்படுவதாகவும் அவற்றி்ல பெரும்பாலானவை மக்களால் எரியூட்டப்படும் நிலையில் அதன் பாரிய புகை சூழல் மாசுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினால் சுற்றாடல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அவற்றின் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக சில உற்பத்திகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய சேசே பக்கற்றுகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அதனை நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அழிவுறாத லஞ்ச் சீட் உபயோகத்தை மூன்று மாதங்களுக்குள் நாட்டில் தடைசெய்வதற்கு நடவடிக்ைக எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.