செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் வீட்டுக்காவல் முறைமைக்கு நீதியமைச்சு இணக்கம்!

இலங்கையில் வீட்டுக்காவல் முறைமைக்கு நீதியமைச்சு இணக்கம்!

0 minutes read

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் சிறிய குற்றங்களுக்கான சிறைத்தண்டனை என்பவற்றுக்கான தீர்வாக இந்த முறை பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய சிறிய குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகளை விளக்கமறியலில் வைக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களது வீடுகளிலேயே தடுத்து வைப்பதற்கு யோசனை சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் ஊடாக சிறைச்சாலைகள் அதிகாரிகளினால் அவர்கள் கண்காணிக்கப்படுவர் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார தேவைகள், தொழில் நடவடிக்கைகள், மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் முன்னர் அனுமதி பெற்ற செயற்பாடுகளுக்காக அவர்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.