செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஆர்யாவின் கேப்டன்!

அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஆர்யாவின் கேப்டன்!

0 minutes read

‘டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்புள் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘கேப்டன்’ படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.