செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையை 37 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

இலங்கையை 37 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

1 minutes read

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 306 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 119 ஓட்டங்க்ளைப் பகிர்ந்த போதிலும் அவர்களது முயற்சிகள் வீண் போயின.

பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அணித் தலைவர் ஷஹீன் ஷா அவ்றிடி 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், பாஹீம் அஷ்ரவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சல்மான் அலி அகா 107 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைவிட பாபர் அஸாம் 45 ஓட்டங்களையும் சாத் பெய்க் 39 ஓட்டங்களையும் ஹசன் நவாஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன்: சல்மான் அலி அகா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.