செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது | ரசிகர்கள் கொண்டாட்டம்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது | ரசிகர்கள் கொண்டாட்டம்

1 minutes read

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். பாடல் வெளியான 10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.