செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தீராக் காயங்கள் | கேசுதன்

தீராக் காயங்கள் | கேசுதன்

1 minutes read

காலம் கடந்த நினைவுகளை புரட்டிப் பார்த்தால் பேரினவாத கும்பல்களின் அட்டுழியங்களே வரிசையாக உள்ளது. பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட அரிய நூல்களை சுயநலத்திற்காகவும் இனவாததிற்காகவும் எரியூட்டிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

1981 நூலகம் எரிப்பு என்பது இனவாதத்தின் முதலடி. வன்முறைகளை கட்டியெழுப்புவது சிங்கள அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகவே இன்றுவரை கட்டவிழ்த்து தான் காணப்படுகிறது. தெற்காசியாவின் உன்னத பொக்கிஷமாக காணப்பட்ட அரும்பெரும் தமிழ் நூல்களை பாதுகாத்த யாழ் பொது நூலகத்தை எரியூட்டியது அனைத்து மக்களின் அழியாத சான்றாகவே இன்றும் உள்ளது. அன்றைய அரசியல் தலைவர்களின் இனவெறிச்செயல் (நூலகம் எரியூட்டப்பட்டது ) ஈழத்தமிழர் மத்தியில் அழியா காயங்கள் என்றே கூறமுடியும்.

சிங்கள அரசியலுக்கு எதிராக தமிழ் தேசிய போக்கிற்கு உரமூட்டி வளர்த்துவிட்ட கொடும் செயல் இதுவாகவே கருதமுடியும். தமிழ் மக்களையும் கலாச்சாரங்களையும் சிதைக்கும் வன்கொடுமை நூலக எரிப்பில் தொடங்கி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் பார்வை தமிழ் மக்களின் மீது திரும்புவதற்கு அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாதமே மிக முக்கிய காரணம். யாழ் மக்களின் மாலா உளைச்சளை ஏற்படுத்திய அழிவு நூலக எரிப்பேயாகும். 2006 ம் ஆண்டில் அரசு தலைவர் மகிந்த ராஜபஷ கூறியது 1983ல் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மற்றும் படுகொலைகள் நூலக எரிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு என்றார் 2016ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் என்ற முறையில் நூலக எரிப்பிற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் . அவரவர் சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டது தமிழ் சமூகமே. எரிப்பதும் நீரே! வருந்துவதும் நீரே என்றால் வலிப்பது யாருக்கு….

சிங்கள வெறியர்களால் பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டது தமிழீழ விடுதலை புலிகள் என்றால் சிங்கள பேரினவாதிகளுக்கு சூட்டப்படும் பெயர் தான் என்ன.

நூலகத்தை எரித்ததற்கு பழிவாங்கும் நோக்குடன் தமிழ் மக்கள் சிங்களவர்களின் காகிதத்தை கிழித்தார்கள் என்று கூறுவார் எவருண்டு.எரியாத நெருப்பை பற்ற வைத்த தீக்குச்சியும் அவர்களே. தீப்பிழம்பாய் உருவெடுத்ததும் அணைப்பதற்கு முயன்றால் முடியாத காரியம் தான். தமிழ் மக்களின் இன உணர்வை கேவலப்படுத்திய அரசியல் குடும்பங்கள் அன்றில் இருந்து இன்றுவரை உலாவித்தான் திரிகின்றனர்.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.