செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பயங்கரவாத தடைச்சட்டம் | கேசுதன்

பயங்கரவாத தடைச்சட்டம் | கேசுதன்

1 minutes read

இனஒடுக்குமுறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் உலக நாடுகளிலும் குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ள நிலையில் இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. இன்றுவரை தடைச்சட்டத்தின் கீழ் 400ற்கு மேற்ப்பட்ட மக்கள்
சிறைக்கைதிகலாய் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் மனிதஉரிமை மீறும் செயற்பாடுகளே தமிழர் மண்ணில் வேரூன்றி காணப்படுகிறது.

தமிழர் காணிகள் சுவீகரிப்பு தமிழர் காணிகளில் இராணுவ முகாம்கள் , திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்ற முயற்சி, தமிழ் இளைஞர்கள் கைது என அனைத்தும் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது. இன்றுவரை அதிகார பரவலாக்கம் என்று சிறுபான்மை இனத்தை கொன்று குவித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையில் உரிமைகளை கொள்ளையிடும் கூட்டத்திற்கு அடிபணிந்து இருப்பதிற்கு பதிலாக பல குடும்பங்கள் பல இன்னல்களை சகித்தவண்ணம் உள்ளன.

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் அனைத்து தமிழனும் தன்மான பொறிவின்றி வாழ்ந்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் இன்றுவரை வடக்கு கிழக்கு மக்கள் சொல்லணாத்துயர் அனுபவித்து வருகின்றனர். இன்றுவரை போர்க்குற்ற செயல்களை அறிந்திராதோர் எவருமில்லை. இன்றும் கூட தமிழ் கட்சி பிரதிநிதிகளால் யுத்தக்குற்றங்கள் , மனித உரிமை மீறல் , காணி அபகரிப்பு குடியிருப்பு சிதைப்பு திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் , பயங்கரவாத தடைச்சட்டம் , அரசியல் கைதிகள் , காணாமல் ஆக்கப்பட்டோர் அவர்களின் குடும்பங்களுக்கு நீதிகோரல் என்பன ஐ.நா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் பல கட்சி தொண்டர்கள் மதகுருமார்கள் முன்னாள் ஜனாதிபதி என பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி குரல் கொடுத்தவண்ணமுள்ளனர். இனவாதம் என்பதை தலை மேல் எடுத்து சிறுபான்மை இனத்தின் மேல் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஒன்றை திணிப்பது ஏன்?

புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என பெயர் சூட்டிய பெரும்பான்மை இன தலைவர் இன்றைய நாட்டின் நிலைமையை பார்த்து மக்கள் முன் யார் பயங்கரவாதி என வாக்கெடுப்பில் ஈடுபட்டாள் பெருவாரி வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் போலும். ஒரு நாட்டின் இறையாண்மை எது என்பதற்கு புரிதல் இல்லாத அரசியல் தலைவர்களின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை மக்களை விட அவர்களின் குடும்பங்களின் உல்லாச போக்குகளே விகிதாசார அடிப்படையில் வெகுவாக வளர்ந்து செல்லும் அதையும் கண்முன்னே காண முடிகிறது.

எங்கள் உரிமைகள் சொத்துக்களை பாதுகாப்பது ஒவ்வொரு மக்களின் கடமை. பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து எம் உரிமைகளை பாதுகாக்க குரல்கொடுப்பபோம்.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.