செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை | பிரசன்ன ரணதுங்க

பிரதமர் பதவியில் மாற்றம் இல்லை | பிரசன்ன ரணதுங்க

0 minutes read

எவர் எத்தகைய கூற்றுக்களை முன்வைத்தாலும் பிரதமரை மாற்றுவதற்கான எந்தத் தீர்மானமும் கிடையாது என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது பிரதமராக பதவி வகிக்கும் தினேஷ் குணவர்தன மிகுந்த அனுபவம் மிக்கவர் என்பது அவரது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதமரை மாற்றுவதற்கு தயாரில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தேனுக விதானகமகே அவரது இராஜாங்க அமைச்சில் கடமையைப் பொறுப்பேற்றபோது அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்படி கூற்றை வெ ளியிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், அரசியலமைப்புக்கு இணங்கவே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தையே தொடர்ந்தும் பெற்றுக்ெகாள்வர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.