நாட்டுக்கு அருகில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் கொந்தளிப்பினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (20) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிமுதல் நாளை (21) புதன்கிழமை பிற்பகல் 3:30 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் தீவிர மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.