0
நம் அனைவருக்குமே தொப்பையை குறைத்து தட்டையான வயிறுடன் வலம்வர வேண்டும் என்பதுவே ஆசை.இதற்கு சரியான உணவுகளை உட்கொண்டு டயட்டை பின்பற்றினாலே போதும்.
- முதலில் ஜங்க் உணவுகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, நார்ச்சத்து- ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்களை சாப்பிட வேண்டும், குறிப்பாக அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், அப்போது தான் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.
- தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புகளை கரைக்கவும் முக்கிய பங்கு வகிப்பது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் கொழுப்பை குறைக்கலாம்.
- பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பாதாமை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது குடைமிளகாய், இதிலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபைன் உடல் எடையை குறைக்க உதவி செய்வதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
- வேக வைத்த காய்கறிகள் அல்லது பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும்.
- ஸ்நாக்ஸ் தேவைப்படும் நேரத்தில் ஆப்பிளை உட்கொண்டால் பசியுணர்வு குறைந்து உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
நன்றி | வவுனியா நெற்