1
தேவையான பொருட்கள்:
- கனிந்த வாழைப்பழம் – 1 (பெரியது, தோலுரித்தது)
- கோதுமை மாவு – 3 கப்
- பால் – 1/2 கப்
- உப்பு – 1 டீஸ்பூன்
- நெய் – 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் வாழைப்பழத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் பால், உப்பு, நெய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பின்பு அதில் கோதுமை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிறகு அதை 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
- பின் மாவை மீண்டும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- அடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஒரு சப்பாத்தியைப் போட்டு முன்னும் பின்னும் நெய்யைத் தடவி திருப்பிப் போட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சப்பாத்தியாக போட்டு எடுத்தால், வாழைப்பழ ரொட்டி/வாழைப்பழ சப்பாத்தி தயார்.
நன்றி | Tamilbeauty