செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் காளான் பெப்பர் ப்ரை

காளான் பெப்பர் ப்ரை

1 minutes read

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு..

  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்

காளான் ரோஸ்ட்டிற்கு…

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 3
  • காளான் – 250 கிராம்
  • குடைமிளகாய் – 1
  • தண்ணீர் – 1/4 கப்
  • உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • வரமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது


செய்முறை:

  • முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி, குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
  • இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காளானில் ஊற்றி கிளறி இறக்கினால், காளான் பெப்பர் ப்ரை தயார்.

நன்றி | Tamilbeauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More