0
தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கிறது.
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 1,080 ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுஜீவ தம்மிக்க தெரிவிக்கின்றார்.
காலத்துடன் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிப்பதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.