செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அதிகரித்து வரும் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்

அதிகரித்து வரும் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்

1 minutes read

மகாவலி, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆறுகளின் நீர் மட்டம், பல இடங்களில் விரைவாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மலையக பகுதியில் பெய்தும் வரும் அடை மழை காரணாமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளில் நான்கு வான்கதவுகள் நேற்று (21) அதிகாலை முதல் திறக்கப்பட்டன.

வினாடிக்கு 200 கன அடி வீதம் இக்கதவுகளால், நீர் வெளியேற்றப்படு வதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

இந்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் எஞ்சிய வான் கதவுகளும் திறக்கப்படும்.

இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு கீழே கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு உதவிப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More