0
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- வெங்காய வடகம் – 6 துண்டு
சுவையான… முட்டைக்கோஸ் சட்னிசுவையான… முட்டைக்கோஸ் சட்னி
- சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்துக் கொள்ளவும்)
- பூண்டு – 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)
- தக்காளி – 1 (நறுக்கியது)
சிக்கன் தொக்குசிக்கன் தொக்கு
- மஞ்சள் பூசணிக்காய் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
- மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- வெல்லம் – ஒரு சிறு துண்டு
- தண்ணீர் – தேவையான அளவு
- புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
- பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.
நன்றி | Tamil Beauty