செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நவம்பர் 18 முதல் யூகி

நவம்பர் 18 முதல் யூகி

1 minutes read

‘Forensic’ மற்றும் ‘Kala’ போன்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களை தயாரித்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘யூகி’.

இந்த ‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பாக்யராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார். அறிமுக இயக்குநரான ஜாக் ஹாரிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து படம் திரைக்கு வரத் தயாராகவுள்ளது. அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை 11:11 பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிடுகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.