தமிழ் சினிமாவில் மண் சார்ந்த முகமாக அறிமுகமாகி, பிரபலமான நடிகர் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் – எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், சுப்ரமணியம் சிவா, சத்யா, ‘அருவி’ பாலா, உதயா, யாசர், ராஜன், ‘அருவி’ மதன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ். பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இரவுப் பொழுதை உற்சாகமாகக் கழிக்க காட்டுப் பகுதிக்குச் செல்லும் நண்பர்கள் .. எதிர்பாராதவிதமாக அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களில் சிக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே மின்னும் ஓர் இரவு’ படத்தின் கதை. ஒரு நாள் இரவில் நடைபெறும் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படத்தை நவம்பரில் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிடுகிறோம்” என்றார்.