0
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம் நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
வேகவைத்த பட்டாணி – 50 கிராம்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சப்ஜி மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பிறகு வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சப்ஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கிய பன்னீரை சேர்த்து வதக்கவும்.
- கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும்.
- குடைமிளகாய் பன்னீர் தயார்!