1
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 2 துண்டு
தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
நண்டு மசாலா செய்ய
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 3 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
தக்காளி – 5 நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
நண்டு – 2 கிலோ
தண்ணீர் – 2 கப்
கறிவேப்பிலை
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, இஞ்சி, தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து 4 நிமிடம் வறுக்கவும்.
- பின்பு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.
- அடுத்து அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்பு அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும் .
- அடுத்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து 6 நிமிடம் வதக்கவும்.
- பின்பு நண்டு சேர்த்து கலந்துவிடவும், பிறகு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேகவிடவும்.
- கடைசியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
- நண்டு மசாலா தயார்!