குளிர் காலத்தில் ஏற்படும் சூறாவளியான வெடிகுண்டு சூறாவளியால் அமெரிக்காவின் கலிபோர்னியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று இப்போது வெடிகுண்டு சூறாவளியாக மாறியுள்ளதால் கலிபோர்னியாவின் தென் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூறாவளியால் மரம் சரிந்து விழுந்தமையால் 2 வயது குழந்தை பலியானது.
மேலும் சான்பிரான்சிகோ விமான நிலைய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்து வரும் நிலையில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
புயல் வெடிகுண்டு சூறாவளியாக மாறியமையால் அவசரகாலநிலை அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.