செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

சடலமாக மீட்கப்பட்ட 8 புலம்பெயந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்

0 minutes read

இந்த வார தொடக்கத்தில் கனடாவின் செயின்ட் லோரன்ஸ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட எட்டு புலம்பெயர்ந்தோரில் இருவரை Akwesasne Mohawk பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட படகின் உரிமையாளரான உள்ளூர்வாசியை இன்னும் தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

28 வயதான ஃப்ளோரின் ஐயோர்டாச் என அடையாளம் காணப்பட்ட ஆண்களில் ஒருவர், ஒரு வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளுக்கான கனேடிய பாஸ்போர்ட்களை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட பெண்களில் ஒருவரான கிறிஸ்டினா (மோனாலிசா) ஜெனைடா ஐயோர்டாச் என்றும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர், அவருக்கும் 28 வயது.

மீட்கப்பட்ட சடலங்களில் நான்கு இந்திய பிரஜைகளின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More