செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் முன்னோட்டம்

இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட ‘இது கதையல்ல நிஜம்’ படத்தின் முன்னோட்டம்

1 minutes read

நடிகர் சந்தோஷ் சரவணன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘இது கதையல்ல நிஜம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘இது கதையல்ல நிஜம்’. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தோஷ் சரவணன், நடிகை சுனு லஷ்மி, நடிகர்கள் ஜெகன், மொட்டை ராஜேந்திரன், டி. பி. கஜேந்திரன், சென்ராயன், ஆர். வி. உதயகுமார், இளங்கோ, நடிகைகள் கோவை சரளா, அனிகா விக்ரமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். ஏ. ராஜதுரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கலா தியேட்டர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஆசியாசின் மீடியா எனும் பட நிறுவனம் வெளியிடுகிறது.

முன்னோட்டத்தில் காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள், சென்டிமென்ட் ஆகிய கொமர்ஷல் அம்சங்கள் இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு ரசிகர்களிடம் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.