அமெரிக்காவில் அலபாமாவில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி துப்பாக்கி சூடுகள் அமெரிக்காவில் நடப்பது இது முதல் முறை இல்லை என்றும் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது ஒரு தொற்று நோயாகியுள்ளது. நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராக செயல்படவேண்டுமென்று மக்கள் தரப்பு வாதமாக உள்ளது. துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பான திருத்த சட்டங்கள் கொண்டுவரட வேண்டும் என்பதும் மக்கள் விருப்பாகியுள்ளது.
இன்று வழமை போலவே டென்டவில்லே நகரில் உள்ள மகோகனி டான்ஸ் ஸ்டூடியோ என்ற இடத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் 20பேர் சுடபட்டுள்ள நிலையில் 6 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகிய போதும் துப்பாக்கி சூட்டுக்கான அதிகார பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.