செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 176 பேர் பயணித்த விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவ வீரர்களுக்கு சிறை

176 பேர் பயணித்த விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவ வீரர்களுக்கு சிறை

1 minutes read

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 2020ம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி உக்ரைனுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

176 பேர் பயணம் செய்த அந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

ஆரம்பத்தில் இதனை விபத்து என ஈரான் கூறியது. ஆனால், உக்ரைன் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிவதற்கு சற்று முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது. அதேபோல் உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடாவும் தெரிவித்தது.

ஆனால், ஈரான் அதை திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில், சில நாட்களுக்கு பிறகு விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதை அப்போதைய ஜனாதிபதி ஹசன் ருஹானி ஒப்புக்கொண்டார்.

திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் கூறி ஈரான் அரசு மன்னிப்புக் கோரியது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் இராணுவத்தின் வான் பாதுகாப்பு படையின் தளபதி உள்பட 10 இராணுவ வீரர்கள் மீது ஈரான் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் இராணுவ தளபதி உள்ளிட்ட 10 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

தொடர்ந்து அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், டெஹ்ரான் கோர்ட்டு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

விமானத்தின் மீது ஏவுகணை வீச உத்தரவிட்ட இராணுவ தளபதிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 9 இராணுவ வீரர்களுக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More