செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

0 minutes read

அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, ‘போர் தொழில்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘போர் தொழில்’. இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். புலனாய்வு திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம், இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் தயாரித்திருக்கிறது. படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கும் இந்நிறுவனம், போர் தொழில் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.