செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பீரங்கி மலர் | தீபச்செல்வன்

பீரங்கி மலர் | தீபச்செல்வன்

0 minutes read



சயனைடு குப்பிகளில் மண் நிறைத்து
விளையாடும் குழந்தைகள்
பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்
ராணுவ சீருடை அணிவிக்கப்பட்ட
காட்டு மரங்களின் இடையே
நிறுத்தப்பட்ட பீரங்களில்
கொடியெனப் பறந்தன
குருதி புரண்ட வெண் சீருடைகள்

அகழப்பட்ட காட்டின் நடுவே
யுத்த ஒத்திகையின்
அதிரும் குரலால் நடுங்கின காடுகளின் விழிகள்
‘இனி யார்மீது யுத்தம்?’
குழந்தைகளின் முகங்களில் முடிவற்ற கேள்விகள்

காட்டின் பழங்களெல்லாம்
சயனைடு  குப்பிகளெனத் தொங்கின
குருதிக் கரைகளால் சிவந்த பாதையில்
யாரே இழுத்துச் செல்லப்பட்ட விரலடையாளங்கள்

ஒரு நாடு புதைக்கப்பட்ட நிலத்தில்
‘எப்போது வேண்டுமனாலும் யுத்தம்’ என
நீட்டி நிற்கும் ஒரு பீரங்கியின் வாய்குழல் அருகே
ஒரு காந்தள் கொடி படர்ந்தெழ
அதன் மலர்
நீர்ச் சொட்டுகளுடன் விரிந்து பூத்திருந்தது
ஒரு குழந்தையின்
புன்னகை நிரம்பிய முகமாய்.

தீபச்செல்வன்

நன்றி – ஆனந்தவிகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.