செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் நடிக்கும் ‘லியோ’ பட சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு

விஜய் நடிக்கும் ‘லியோ’ பட சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய ட்ரெண்ட் செட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘லியோ’.

இதில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அபிராமி வெங்கடாசலம், ஜார்ஜ் மரியான், மனோபாலா, எஸ். ஜே. சூர்யா, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்… படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், ‘லியோ படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் திகதியன்று வெளியாகும்’ என பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்திருக்கிறார். இதனால் விஜயின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.