செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட பணியாளர் உடல் சிதைந்து மரணம்

விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட பணியாளர் உடல் சிதைந்து மரணம்

0 minutes read

நின்று கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட விமான நிலைய பணியாளர் ஒருவர், உடல் சிதைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து சான் ஆன்டோனியோ, டெக்சாஸ் விமான நிலையத்திற்கு டெல்டா நிறுவனத்தை சேர்ந்த விமானம் வந்திறங்கியது.

பயணிகள் இறங்கிய பின்னரும், விமானத்தின் ஒரு எஞ்சின் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது.

இதனை யூனிஃபை நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் சரியாக கவனிக்கவில்லை.

அவர் விமானத்தின் அருகே சென்றபோது அதிக அழுத்தம் காரணமாக பணியாளரை எஞ்சின் உள்ளே இழுத்துக் கொண்டது.

இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.