செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நேரடியான, தெளிவான தொடர்பு அவசியம் – சீனாவில் அமெரிக்க நிதியமைச்சர்

நேரடியான, தெளிவான தொடர்பு அவசியம் – சீனாவில் அமெரிக்க நிதியமைச்சர்

0 minutes read

சீனாவின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு வெளிப்படையாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெலன் கூறியுள்ளார்.

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

மூத்த தலைவர்களுடனான சந்திப்பு இருதரப்பு உறவை நிலைப்படுத்தி முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய நேரடியான, தெளிவான தொடர்பு அவசியம் என, சீனப் பிரதமர் லி சியாங் துணைப்பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் 10 மணிநேரம் கலந்து பேசிய பிறகு அவர் கூறினார்.

சீனாவின் புதிய பொருளியல் குழுவுடன் உறவை ஏற்படுத்தி அதை வலுப்படுத்துவதே தமது பயணத்தின் நோக்கம் என்று யெலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.