செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது மைக்கை வீசிய அமெரிக்க பிரபலம்!

இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது மைக்கை வீசிய அமெரிக்க பிரபலம்!

0 minutes read

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி (Cardi B) மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர்களின் அருகே வந்து அவர் பாடியபோது, கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி, தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார்.

இதனைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது கும்பலாக சேர்ந்து இளைஞர்கள் தாக்கினார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இதேவேளை, கடந்த மாதம் வேல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.